» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்லூரி மாணவி உள்பட 2 இளம் பெண்கள் மாயம் : போலீசார் விசாரணை

வெள்ளி 15, மார்ச் 2019 1:44:32 PM (IST)

நெல்லை அருகே கல்லூரி மாணவி உட்பட இரண்டு இளம்பெண்கள் மாயமானதால் அவர்கள் கடத்தப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூர் மேலத்தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் கவுசல்யா (17). இவர் புளியங்குடியில் உள்ள மனோ கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்ற கௌசல்யா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரை உறவினர் மற்றும் தோழிகள் வீட்டில் தேடியும் காணவில்லையாம். இதுகுறித்து அச்சன் புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதேபோல் ஊத்துமலை போலீஸ் சரகம் காடுவெட்டி சர்ச் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் மஞ்சு (21). வீட்டில் இருந்து வந்த மஞ்சு நேற்றுமுன்தினம் இரவு திடீரென மாயமானார். அவரைக் காணாததால் திடுக்கிட்ட அவரது பெற்றோர் அக்கம் பக்கம் தேடியும் காணவில்லை. இந்த சம்பவம் குறித்து ஊத்துமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம் பெண்கள் திடீரென மாயமானதால் அவர்கள் ஆசை வார்த்தை கூறி  கடத்தி செல்லப்பட்டார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory