» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மோட்டார் பைக் விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பலி

வெள்ளி 15, மார்ச் 2019 2:02:12 PM (IST)

முக்கூடல் அருகே பைக் விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலியினை அடுத்த சுத்தமல்லி பூங்காநகரை சேர்ந்தவர் கோமதி நாராயணன்(56). இவர் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். தற்போது பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வுக்கான பறக்கும் படையில் கோமதிநாராயணன் இடம்பெற்றிருந்தாராம். சம்பவத்தன்று தேர்வுகளை கண்காணித்து விட்டு பைக்கில் திரும்பி காெண்டிருந்தாராம். 

இதில் பாப்பாக்குடி அருகே புதுக்கிராமம் என்ற இடத்தில் வந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஓடியது. இதனால் பிரேக் போட்ட போது பைக்கிலிருந்து  கோமதிநாராயணன் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளை., அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால்  வரும் வழியிலேயே கோமதிநாராயணன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பாப்பாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory