» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு : மாவட்டஆட்சியர் ஏற்படுத்தினார்

வெள்ளி 15, மார்ச் 2019 2:12:31 PM (IST)

நூறு சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து கிராமம் கிராமமாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் பொதுமக்களுக்கு விழிப்புனர்வு எற்படுத்தினார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம் இட்டேரி கிராமத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பொது மக்கள் நூறு சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புனர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஷில்பா பிரபாகர் தலைமையில் இன்று 15.03.2019 நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமையாகும் நமக்குரிய பொது தேவைகளை கேட்டு பெற நிர்வாகத்தேர்வு செய்யக்கூடிய தேர்தலுக்கு அனைவரும் பங்கேற்று நூறுசதவீதம் வாக்களிக்க வேண்டும் கல்வியறிவில் சிறப்பாக இருக்கும் இம்மாவட்டத்தில் வாக்களிப்பது நூறு சதவீதம் ஏற்பட வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் அப்பகுதியிலிருந்து பொது மக்களை அழைத்து மின்னனு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடுகளை விளக்கி கூறினார். இந்த தேர்தல் மூலம் நடைமுறைக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவிகள் செயல்பாடுகள் குறித்தும் விளக்கிக்கூறி மாதிரி ஒட்டுப்பதிவு செய்யச்சொல்லி அவர்கள் வாக்களித்த விதம் திரையில் தோன்றுவதை பார்வையிடச்செய்து விளக்கமளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory