» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆக்ஸ்போர்டு பள்ளியில் மொழித்திறன் போட்டிகள்

வெள்ளி 15, மார்ச் 2019 5:56:24 PM (IST)



தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு சிபிஎஸ்இ பள்ளியில் மொழித்திறன் போட்டிகள் நடைபெற்றது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற மொழித்திறன் போட்டிகளுக்கு ஆக்ஸ்போர்டு கல்வி குழுமத் தலைவர் அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சௌம்யா வரவேற்று பேசினார். பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற மொழித்திறன் போட்டிகளில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

குடியரசு தினம் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சு போட்டியில் இரண்டாம் வகுப்பு மாணவி தக்ஷாஸ்ரீ முதலிடம் பெற்றார். உனக்குப் பிடித்த பாரம்பரிய உணவு என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் முதல் வகுப்பு மாணவர் ஐசக் டேனியல், இரண்டாம் வகுப்பு மாணவி மாதுரி, மூன்றாம் வகுப்பு மாணவி ராஜவைஷ்ணவி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

சுய அறிமுகம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஹிந்தி பேச்சு போட்டியில் மாணவி பிரதக்ஷனா, மாணவர்கள் இப்ராஹிம், முகம்மது யூசுப் ஆகியோர் வெற்றி பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆக்ஸ்போர்டு கல்வி குழுமங்களின் சீனியர் முதல்வர் திருமலை பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.விழாவில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory