» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்கப்பட்டது

வெள்ளி 15, மார்ச் 2019 7:28:56 PM (IST)



பாவூர்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் வனத்துறையால் மீட்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரி கீழசிவஞானபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகபாண்டி. இவருக்கு சொந்தமான 40 அடி ஆழ விவசாய கிணற்றில் இன்று 2 வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று தவறி விழுந்து கிடந்துள்ளது. இது பற்றி அவர் கொடுத்த தகவலின் பேரில் தென்காசி தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையில் விரைந்து வந்து கிணற்றுக்குள் கிடந்த மானை உயிருடன் மீட்டனர். 

வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீருக்காக வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் தப்பி வந்த மான் கிணற்றிற்குள் தவறி விழுந்திருக்கலாம் என்பதால் மீண்டும் வனப்பகுதிக்கே கொண்டு விடுவதற்காக கடையநல்லூர் வனத்துறையினரிடம் மான் ஒப்படைக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory