» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு

செவ்வாய் 19, மார்ச் 2019 5:51:02 PM (IST)திருநெல்வேலியில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாடாளுமன்ற தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால், திருநெல்வேலி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் செலவின பார்வையாளர்கள் ராஜாகோஷ், ,மணி, கபில்மண்டல்,ஆஷிஸ்,  ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (19.03.2019) நடைபெற்றது.இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது-

தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் ஒரு பாராளுமன்ற தொகுதியினை கண்காணிக்க இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் என திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு ராஜாகோஷ்,  (செல்போன் எண்.94597 00850) பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை கண்காணித்திடவும் மணி (செல்போன் எண்.98330 76316) ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை கண்காணித்திடவும், தென்காசி பாராளுமன்ற தொகுதிக்குகபில்மண்டல், (செல்போன் எண்.94773 31207) சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய பகுதிகளையும், சில் ஆஷிஸ்,  (செல்போன் எண்.99575 53101) வாசுதேவநல்லூர், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளின் தேர்தல் செலவுகளை கண்காணிக்க உள்ளனர் என தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தேர்தல் கட்டுப்பாட்டு மையம், ஊடக சான்றிதழ் வழங்கும் மற்றும் கண்காணிப்பு குழு அறை, கணக்கு குழு அறை ஆகிவற்றினை தேர்தல் செலவின பார்வையாளர்கள் பார்வையிட்டு, குழுக்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.இந்த கூட்டத்தின் போது, தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான முத்துராமலிங்கம், திருநெல்வேலி சார் ஆட்சியர் மணீஷ் நாராணவரே, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், தேர்தல் வட்டாட்சியர் புகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory