» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளர் நெல்லை வருகை : சி.பி.எம் மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து

செவ்வாய் 19, மார்ச் 2019 6:22:54 PM (IST)
நெல்லையில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியம் சி.பி.எம் மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து பெற்றார் .

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி திமுக  வேட்பாளர் ஞான திரவியம் இன்று நெல்லை வந்தார், நெல்லை வந்த அவருக்கு திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ,தொடர்ந்து வேட்பாளர் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தார் ,அதனை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு அலுவலகம் வந்த அவருக்கு மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் வரவேற்றார்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனி,ஜெயராஜ், சுடலைராஜ், ஸ்ரீராம் ,மாவட்ட குழு உறுப்பினர் வரகுணன், தோழர்கள் பாலு, ஜெயபால், சுப்பிரமணியன், உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து வேட்பாளர் ஞானதிரவியம் சி.பி.எம் தலைவர்களுக்கு சால்வை போர்த்தி வாழ்த்து பெற்றார் , முன்னதாக திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், மாநகர மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ லெட்சுமணன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார், தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அலுவலகம் வந்த அவருக்கு மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது .

அதனை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அலுவலகம் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்,மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம் ,தமிழாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் அலுவலகம் சென்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory