» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் : தந்தை, 2 மகன்கள் கைது

செவ்வாய் 19, மார்ச் 2019 7:55:16 PM (IST)

களக்காடு அருகே பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தந்தை மற்றும் 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் நடுவூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி புஷ்பம் ( 70). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் புண்ணிய மார்த்தாண்டம் (60). இவர் அந்த பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை புண்ணிய மார்த்தாண்டம் வீட்டு கழிவுநீர், புஷ்பம் வீட்டு முன்பு சென்றதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த புஷ்பம் இதுகுறித்து புண்ணிய மார்த்தாண்டத்திடம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதில் கோபமடைந்த புண்ணிய மார்த்தாண்டம், அவருடைய மகன்கள் சரவணன் (40), ரமேஷ் ஆகியோர் புஷ்பத்தை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் புஷ்பம் தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரை 2 பேரும் சேர்ந்து காலால் மிதித்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த புஷ்பம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த தகவலறிந்த களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நேவி ஜெமிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், புஷ்பத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை .,அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து புண்ணிய மார்த்தாண்டம், அவருடைய மகன்கள் சரவணன், ரமேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைதான 3 பேரும் கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், கழிவுநீர் பிரச்சனையில் தொடர்ந்து எங்களிடம் தகராறு செய்து அவதூறாக பேசியதால் கொன்றோம் என குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புண்ணியமார்த்தாண்டம் மனைவி ரத்னபாய் தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory