» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடிவடக்கு காளியம்மன் கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி: ஸ்டெர்லைட் நிறுவனம் நிதியுதவி!!

புதன் 20, மார்ச் 2019 12:01:59 PM (IST)தூத்துக்குடி வடக்கு காளியம்மன் கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி ஸ்டெர்லைட் நிறுவனம் நிதியுதவியுடன் இன்று தொடங்கியது.

தூத்துக்குடி பொன்னாகரத்தில் வடக்கு காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலைச் சுற்றி சுற்றுச் சுவர் கட்டும் பணிக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த பணிகள் இன்று பூமிபூஜையுடன் இன்று தொடங்கியது. இதில் கோவில் தர்மகர்த்தா பெருமாள், பூசாரி பெருமாள், மகளிர் குழுவைச் சேர்ந்த குருவம்மாள், செயலாளர் குரு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை பொது மேலாளர் ரத்தா கிருஷ்ணன், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கான கல்வி நிதி உதவி, கோவில் திருப்பணி, பெண் தொழில் முனைவோருக்கான கடன் உதவி, கிராம மேம்பாடு, குளம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு சமுதாய பணிகளில் ஸ்டெர்லைட் ஆலை ஈடுபட்டு வருகிறது. மேற்கண்ட தகவல் ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

கமல்Mar 21, 2019 - 01:40:30 PM | Posted IP 172.6*****

என்னடா இது tuty on line ஆ அல்லது sterlite on line ஆ. டெய்லி sterlite நியூஸ் வருது.

sivaMar 21, 2019 - 12:49:38 PM | Posted IP 172.6*****

சுட்டவன் டைய சுவர் கட்ட காசா ...விளங்கியிரும்

நண்பன்Mar 20, 2019 - 05:50:10 PM | Posted IP 172.6*****

வரவேற்கத்தக்கது

உண்மைAug 20, 1553 - 12:30:00 AM | Posted IP 172.6*****

. தூத்துக்குடி மக்களை அளிக்கணும்னு நினைக்கிற ஸ்டெர்லைட் நிறுவனம் மூலமா செய்யணும்னு நெனைக்கிறீங்களே .அந்த சாமியே உங்கள மன்னிக்காது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory