» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்குமரன் : கமல்ஹாசன் அறிவிப்பு

புதன் 20, மார்ச் 2019 4:32:21 PM (IST)

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக பிரபல தொழிலதிபர் டிபிஎஸ் பொன் குமரன் அறிவிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரண்டிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட இருக்கிறது. இதற்கான வேட்பாளர்கள் தேர்வு கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். 

இதில், தூத்துக்குடி தொகுதியின் வேட்பாளராக தொழிலதிபர் டிபிஎஸ் பொன் குமரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோடு தாமோதர நகரைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 59. எம்காம் படித்துள்ளார். நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சீனிவாசகன். இவரது தந்தைவழி தாத்தா பொன்னுசாமி நாடார் காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்துள்ளார். தாய்வழி தாத்தா ரத்னசபாபதி நாடார் விளாத்திகுளம் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ ஆவார். தொழிலதிபரான இவர் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

எப்போதும் வென்றான்Mar 22, 2019 - 10:45:12 AM | Posted IP 172.6*****

மற்ற கட்சிகள் எல்லாம் சாதிப்படியே வேட்பாளரை தேர்ந்தெடுப்பதாக குறை சொல்லிக் கொண்டிருந்த கமலஹாசன், தன்னுடைய கட்சியிலும் தூத்துக்குடிக்கு சாதிப்படியே வேட்பாளரை தேர்வு செய்திருக்கிறார். சாமானியர்களுக்கு அரசியல் என உளறிக் கொட்டிக் கொண்டிருந்த கமல் பெருமகனார், ஏன் ஒரு தொழிலதிபரை, எம்.எல்.ஏக்களின் பேரனை வேட்பாளராக நிறுத்த வேண்டும். வாய் மட்டும் இல்லையென்றால் கமலை நாய் கூட சீண்டாது.

ராமநாதபூபதிMar 22, 2019 - 10:15:02 AM | Posted IP 162.1*****

ரசிகன் கடைசி வரை விசில் மட்டுமே அடிக்க வேண்டும். தனது படத்தை பார்த்து செலவழிக்க மட்டுமே ரசிகன் விடும். மற்ற படி அரசியல் என்று வரும்போது தொழிலதிபர் மட்டும் தான் வேண்டும், தேர்தல் முடியும் போது நிறுத்தப்பட்ட அனைவரும் பலியாடுகள் என்பதை உணரும் காலம் வரும்

P.ராஜரத்தினம் / கட்டாலங்குளம்Mar 21, 2019 - 11:13:43 PM | Posted IP 162.1*****

புதியதோர் தமிழகம் உருவாக்குவோம்

P.ராஜரத்தினம் / கட்டாலங்குளம்Mar 21, 2019 - 11:10:16 PM | Posted IP 162.1*****

நீங்கள் இம்மண்ணின் மைந்தர். உங்களுக்கே எங்கள் வாக்கு. இரு கட்சிகள் தூத்துக்குடி தொகுதியில் பிறக்காத, வளராத, வசிக்காத வேட்பாளர்களை இங்கு களம் இறக்கியுள்ளனர். அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். தூத்துக்குடி மண்ணில் பிறந்து வளர்ந்து வசித்து வருகிற லட்சக்கணக்கான மக்களை புறந்தள்ளிய தி.மு.க, பா.ஜ.க இரண்டு கட்சிகளையும் நாம் புறந்தள்ளுவோம். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் மண்ணின் மைந்தர் , மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் , தலைவர் கமல்ஹாசனின் அன்பிற்குரியவர் அண்ணன் திரு. பொன்கு மரன் அவர்களின் வெற்றி மய்யத்தின் வெற்றி . மண்ணின் மைந்தருக்கு வாக்களிப்போம். வெற்றி பெற செய்வோம்.'

சாய்Mar 20, 2019 - 06:06:04 PM | Posted IP 172.6*****

சூப்பர் - திமுக ஓட்டு காலி - கனியக்கா அவ்ளோதான் - திமுக டெபாசிட் வாங்குமா ?

தனசிங்Mar 20, 2019 - 05:43:59 PM | Posted IP 162.1*****

வாழ்க சமுதாயம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory