» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாராளுமன்ற தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவு : காந்திய சேவாமன்றம் முடிவு

புதன் 20, மார்ச் 2019 7:45:28 PM (IST)

பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவளிக்க காந்திய சேவாமன்றம் முடிவு செய்துள்ளது.

தூத்துக்குடி மண்டல காந்திய சேவா மன்ற நிர்வாகிகள் கூட்டம் அத்திமரப்பட்டியில் நடைபெற்றது. நிர்வாகிகள் கூட்டத்திற்கு கிளை தலைவர் த.பால்துரை தலைமை வகித்தார்.  தூத்துக்குடி மண்டல காந்திய சேவா மன்ற துணைத் தலைவர் சுந்தரவேல், செயலாளர் தேவராஜ், துணைச் செயலாளர் மஜீத், பொருளாளர் கருப்பசாமி, ஆலோசகர் வின்சென்ட் உள்பட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக காந்திய சேவா மன்ற நிறுவனர் ராஜேந்திரபூபதி கலந்து கொண்டு பேசினார். தூத்துக்குடியை பொருத்தவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை கட்டிடங்கள் மற்றும் பல பாலங்கள் திமுக ஆட்சியில்தான் கட்டப்பட்டு உள்ளன. சாதாரண மக்களின் கோரிக்கைகள் உடனே பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. கால்வாய்களில் திறக்கப்படும் தண்ணீர் கடைசி குளத்தை அடைந்து கடைமடை பகுதிகள் பாயும் வரை முக்கியத்துவம் வழங்கப்பட்டன. இது போன்ற பல காரணங்களுக்காக வருகிற மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தும், அவரது வெற்றிக்காக பொதுமக்களை சந்தித்து வாக்குகள் கேட்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் கடந்த 2005-ம் ஆண்டில், தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையையும், தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையையும் இணைக்கும் வகையில் கோரம்பள்ளம் குளத்தில் பாலம் அமைத்து, அத்திமரப்பட்டி - சிறுப்பாடு இடையே புதிய சாலையை உருவாக்கி, ஸ்பிக்நகர் - புதுக்கோட்டை புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி தந்த அப்போதைய அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோருக்கு வருகிற மே மாதத்தில் பிரமாண்டமான பாராட்டு விழாவை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.


மக்கள் கருத்து

தமிழன்-Mar 21, 2019 - 06:39:29 PM | Posted IP 162.1*****

Nice !!! good option .

sivaMar 21, 2019 - 12:45:46 PM | Posted IP 172.6*****

வரவேற்கிறேன் ..

RajaMar 21, 2019 - 10:06:09 AM | Posted IP 172.6*****

Super

IndianMar 20, 2019 - 08:48:50 PM | Posted IP 162.1*****

They seems to be true Gandhians?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory