» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஓட்டுக்கு பணம் வழங்கினால் தகவல் தெரிவிக்கவும் : சுரண்டை டிஎஸ்பி வேண்டுகோள்

புதன் 20, மார்ச் 2019 7:58:02 PM (IST)பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுக்கு பணம் வழங்கினால் தகவல் தெரிவிக்கலாம் என சுரண்டை டிஎஸ்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்ட எஸ்பி., ஆலோசனையின் பேரில் ஆலங்குளம் டிஎஸ்பி சுபாஷினி தலைமையில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. சுரண்டை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்ட இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து சுரண்டை அண்ணா சிலையை வந்தடைந்தது. 

அணிவகுப்பில் வாக்களிக்க வேண்டியது அவசியம், அச்சமின்றி வாக்களிப்பதற்கு காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள், மற்றும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குதல், மதுபானங்கள் சப்ளை செய்தல், மற்றும் தேர்தல் விதிமீறல்கள் இருப்பின் சிவிஜில்  செயலி மூலம் தேர்தல் கமிஷனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டால் புகார்தாரரின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, எஸ்ஐக்கள் சுரண்டை ஜெயராஜ், அங்கு தாய், வீகேபுதூர் ஜெயக்குமார், ஊத்துமலை முத்துமாலை, எஸ்எஸ்ஐக்கள் ஜெய்சங்கர், அழகுமுத்து, ஆறுமுகம்,மற்றும் 30க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory