» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை,தூத்துக்குடியில் நாளை பங்குனி உத்திரவிழா

புதன் 20, மார்ச் 2019 8:42:03 PM (IST)

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி வாடகை,வேன் உள்ளிட்டவற்றிற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோயில்களில் நாளை பங்குனி உத்திரத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வெளியூரில் வசிக்கும் பக்தர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு வருகை தந்துள்ளனர். எத்தனையோ தெய்வங்கள் வழிபாடு இருந்தாலும் குலதெய்வ வழிபாடு மிக முக்கியமானது. 

குலதெய்வ அருள் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் எதுவும் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை பொது மக்களிடம் உள்ளது. அதற்காக வருடாவருடம் பங்குனி உத்திரதிருவிழா அன்று வெளியூரில் இருக்கும் பொதுமக்கள் தென் மாவட்டங்களில் உள்ள தங்கள் குலதெய்வ கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து விட்டு செல்வார்கள். 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அய்யனார் மற்றும் சாஸ்தா கோயில்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னரே விழா களைகட்ட துவங்கியுள்ளது. பெரும்பாலும் குலதெய்வ கோவில்கள் தனியான இடத்தில் இருக்கும் என்பதால் பல பேர் வாடகை வேன்களில் செல்வது வழக்கம். இதனால் கார் வேன் உள்ளிட்ட வாடகை கிராக்கி அதிகரித்துள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory