» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 5பேர் கைது

புதன் 20, மார்ச் 2019 9:34:57 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் மற்றும் புரோக்கரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி தாமோதர நகரில் உள்ள ஒரு வீட்டில், பட்டப்பகலில் விபச்சாரம் நடப்பதாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி தலைமையிலான போலீசார், அங்குள்ள மாரிமுத்து மனைவி சுதா (35) என்பவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்திய போது அங்கு விபச்சாரம் நடப்பது தெரியவந்தது.  

இதையடுத்து உமா மற்றும்,  தூத்துக்குடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த செல்லப்பெருமாள் மனைவி மாரியம்மாள் (52),  பிரையன்ட் நகர் 7வது தெருவைச் சேர்ந்த மணி  மனைவி ஜெயா (30), ஏரலைச் சேர்ந்த சேகர் மனைவி ஜெனிபர் (25) ஆகிய 4 பெண்களையும் புரோக்கராக செயல்பட்ட முத்தையாபுரத்தைச் சேர்ந்த  அழகப்பன் மகன் மாரிமுத்து (27) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து

ஹீ ஹீMar 21, 2019 - 01:34:45 PM | Posted IP 162.1*****

போட்டோ போடவும்

நிஹாMar 21, 2019 - 10:40:28 AM | Posted IP 162.1*****

இதில் தெரியாம போச்சே என வருத்தப்பட என்ன இருக்கிறது. விபச்சாரியிடம் போவது என்பது சாக்கடையில் இறங்குவது போன்றது அல்லவா?

அருண்Mar 20, 2019 - 11:24:54 PM | Posted IP 172.6*****

என்ன தெரியாம போச்சே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory