» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வு ரத்து: கனிமொழி எம்.பி. பேச்சு

வியாழன் 21, மார்ச் 2019 8:19:57 AM (IST)

தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வு நிச்சயம் ரத்து செய்யப்படும் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தென்திருப்பேரையில் உள்ள தனியார் மண்டபத்தில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு கனிமொழி எம்.பி. பேசியதாவது: பாசிச கொள்கைகளைக் கொண்ட பா.ஜனதாவின் அராஜக ஆட்சியால் மக்கள் பெரிதும் வேதனைப்படுகின்றனர். தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் காவு கொடுத்து, தனது ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும், தங்கள் மீது எந்த வழக்குகளும் பாயாமல் இருக்கவுமே அ.தி.மு.க. அரசு, மத்திய பா.ஜனதா அரசுக்கு காவடி தூக்கி வருகிறது. எனவே மத்தியில் பா.ஜனதா அரசும், தமிழகத்தில் அ.தி.மு.க. அரசும் அகற்றப்பட வேண்டும்.

தி.மு.க.வைப் போன்று அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி உள்ளனர். நீட் தேர்வை பா.ஜனதா அரசு திணித்தபோது, அதனை அ.தி.மு.க. அரசு கண்டு கொள்ளாததால், ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது தேர்தலுக்காக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அ.தி.மு.க. கபட நாடகமாடுகிறது. தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வு நிச்சயம் ரத்து செய்யப்படும். 50 நாட்கள் பொறுத்து கொள்ளுங்கள், கருப்பு பணத்தை முற்றிலும் ஒழிப்பேன் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடியால், வங்கிகளின் வாசலில் தவம் கிடந்த 122 அப்பாவி ஏழைகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன. ஆனால் கருப்பு பணம் ஒழிக்கப்படவில்லை. மாறாக வீடுகளில் வைத்திருந்த சிறுசேமிப்புகள்தான் ஒழிந்தன. மேலும் ஜி.எஸ்.டி. வரி விதித்ததால் சிறு குறு தொழில்களும் அழிந்தன. இதனால் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.

பல லட்சம் கோடி ரூபாயை தன்னுடைய நண்பர்களான சில பெரு நிறுவன முதலாளிகளுக்கு பா.ஜனதா அரசு தள்ளுபடி செய்கிறது. ஆனால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடன் ரூ.72 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. இதனால் ஆண்டுதோறும் 21 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் ஆழ்வார்திருநகரி வடக்கு ரத வீதியில், திருச்செந்தூர் கீழ ரத வீதியில் தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ் (திருச்செந்தூர்), பார்த்தீபன் (ஆழ்வார்திருநகரி மேற்கு), தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

இவன்Mar 21, 2019 - 07:25:40 PM | Posted IP 162.1*****

எல்லாம் பொய் .. ஈழத் தமிழர்களை காப்பாற்ற முடியவில்லை

RaniMar 21, 2019 - 10:06:59 AM | Posted IP 162.1*****

Best wishes

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory