» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம் : காங்.,தலைவர் பழனிநாடார் உறுதி

வியாழன் 21, மார்ச் 2019 10:39:33 AM (IST)தென்காசி திமுக வேட்பாளரை 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என காங்கிரஸ் மாவட்ட தலைவர்  பழனி நாடார் தெரிவித்தார்.

நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் தென்காசி தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் தனுஷ் எஸ் குமார் நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனி நாடாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது வேட்பாளரிடம் பழனி நாடார் தென்காசி தொகுதியில் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் உங்களை வெற்றிபெறச் செய்வோம் என உறுதி கூறினார். அப்போது அவருடன் நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன், மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வேலுச்சாமி, சமுத்திரம், சங்கரன்கோவில் நகர தலைவர் உமாசங்கர், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் செந்தூர்பாண்டியன், முருகையா, சுந்தர்ராஜ், சங்கை அய்யாதுரை, சாம்பவர் வடகரை ரத்தினம், செல்லக்கனி , ஆனந்த், பேரூர் காங்கிரஸ் தலைவர்கள் எஸ்கேடி ஜெயபால், பூக்கடை முருகன், கல்யாணசுந்தரம், பாலகன், மாவட்ட ஐஎன்டியூசி தலைவர் முத்தையா, அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பிரபாகர், தென்காசி சட்டமன்ற ஊடகப் பிரிவு தலைவர் சிங்கராஜ், மாவட்ட துணைத்தலைவர் பால் என்ற சண்முகவேல், வட்டார, நகர செயலாளர்கள் பன்னீர்செல்வம், காந்தையா, தெய்வேந்திரன், நவநீதன், அண்ணாதுரை, செல்வன்,  செல்வம், பாட்ஷா, ராஜன் முருகையா, அருணாசலக்கனி, மணிகண்டன், சாமுவேல், டாக்டர் ஜெயச்சந்திரன், மாரியப்பன், ராமையா, சுடலையாண்டி தேவர், ஆதி நாராயணன், ஆறுமுகம், சண்முக சுந்தரபாண்டியன், மாரிகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி நாகம்மாள்,  உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory