» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரயில் நிலையத்தில் தவறிவிழுந்து ஒருவர் படுகாயம்

வியாழன் 21, மார்ச் 2019 11:05:46 AM (IST)

திருச்செந்தூரிலிருந்து பாளையில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு சாமி கும்பிட வந்த கூலித்தொழிலாளி ரயில் நிலையத்தில் ரயிலிலிருந்து தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் தெருவை சேர்ந்தவர் வைரமணி (57) கூலி தொழிலாளி. பங்குனி உத்திரத்தையொட்டி இன்று பாளையில் உள்ள குல தெய்வமான சாஸ்தா கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காலை திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு வரும் பயணிகள் ரயிலில் வந்து கொண்டிருந்தார். பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் அதிலிருந்து இறங்கிய வைரமணி எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் ரயிலுக்கும் பிளாட்பார்த்திற்க்கும் இடையில் சிக்கிக் கொண்ட அவருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இதுகுறித்து தகவல் அறிந்த சந்திப்பு ரயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory