» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மக்கள்நீதி மய்யத்தின் நெல்லை வேட்பாளர் அறிவிப்பு

வியாழன் 21, மார்ச் 2019 11:43:47 AM (IST)

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் வெண்ணிமலை (53) போட்டியிடுகிறார். 

தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்டவர் வெண்ணிமாலை. பொறியியல் பட்டதாரியான இவர், அண்ணா நகரில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது மனைவி சாரதா, மருந்து வியாபாரத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். மூத்த மகன் மாணிக்கவாசகம் பொறியாளர். இளைய மகன் சுப்பையா மருத்துவராக உள்ளார்.  

வெண்ணிமலை கூறுகையில், திருநெல்வேலி தொகுதியில் ஏராளமான உறவினர்கள் உள்ளனர். எனக்கு மிகவும் பரிச்சயமான ஊர் திருநெல்வேலி ஆகும். திருநெல்வேலி தொகுதியில் மென்பொருள்  நிறுவனங்களை தொடங்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும் முயற்சிப்பேன் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory