» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆயிரம் தொண்டர்களுடன் காங்கிரசில் இணைப்பு : தமாகா நிர்வாகி தகவல்

வியாழன் 21, மார்ச் 2019 12:44:15 PM (IST)தமிழ் மாநில காங்கிரஸின் மாநில  கொள்கை பரப்பு செயலாளர் சங்கை. கணேசன் தமாகாவிலிருந்து விலகி நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாசுதேவநல்லூர் தமாகா வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது மாவட்ட ஓபிசி தலைவர் .திருஞானம், மாவட்ட பொதுசெயலாளர் குருசாமி பாண்டியன், மாநில பொதுகுழு உறுப்பினர் நாகராஜன், மாநில பேச்சாளர் பால்த்துரை, புளியங்குடி நகர காங். தலைவர் பால்ராஜ், சிவகிரி நகர காங்.தலைவர் சண்முக சுந்தரம், வாசு. தொகுதி ஓபிசி.தலைவர் காந்தி. வட்டார காங்.செயலாளர் மருதப்பன், செயற்குழு ஆறுமுகம், ஆறுமுகம், ஓபிசி.தலைமலை, மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கை கணேசன் தேசிய நலனில் அக்கறை கொண்டு அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பாடுபடும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தலைவர் ராகுல் காந்தி பிரதமராகிட கடுமையாக உழைப்போம் எனவும். தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியை அழைத்து விழா நடத்தி சுமார் ஆயிரம் தமாகா. நிர்வாகிகள், தொண்டர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைவது என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory