» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உடல்நலக்குறைவால் இளம்பெண் தற்கொலை

வியாழன் 21, மார்ச் 2019 1:26:01 PM (IST)

சங்கரன்கோவில் அருகே உடல்நலக்குறைவால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள  சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த வேலு என்பவரது மகள்  முருகேஸ்வரி (20). இவர், விருதுநகர் மாவட்டத்திலுள்ள மில்லில் வேலை  பார்த்து வந்தார். முருகேஸ்வரி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், சம்பவத்தன்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து  மயங்கி கிடந்தார். 

உறவினர்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில்  அரசு மருத்துமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory