» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆறு மாத குழந்தை மர்மமான முறையில் இறப்பு : போலீசார் விசாரணை

வியாழன் 21, மார்ச் 2019 1:41:36 PM (IST)

வள்ளியூரில் 6 மாத குழந்தை மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சங்கரன்கோவில் தாலுகா சுப்புலாபுரம் அருகே உள்ள கீழவயலியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (27) நெசவு தொழிலாளி. அவருடைய மனைவி செல்வநாயகி (23). இவர்களுக்கு கதிரவன் என்ற ஆறு மாத ஆண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் குழந்தை கதிரவனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் குழந்தையை வள்ளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு செல்வநாயகியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் மர்மசாவு குறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory