» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தத்தெடுத்த கிராமத்திற்கு வசதிகள் செய்து தரவில்லை : கனிமொழி மீது தமிழிசை குற்றச்சாட்டு

ஞாயிறு 14, ஏப்ரல் 2019 12:25:03 PM (IST)

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தான் தத்தெடுத்த கிராமத்திற்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என பாஜக வேட்பாளர் தமிழிசை குற்றம்சாட்டினார். 

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அவரது சிலைக்கு மாலை அணிவித்த பிறகு தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பிரதமர் மோடியின் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகின்றது. டாக்டர் அம்பேத்கரின் அரசியலமைப்பு சாசனத்தை இந்தியஅரசின் வேதநுால் என்று கூறிய பிரதமர் மோடி பணபரிமாற்ற  செயலிக்கு பீம் என பெயரிட்டார். நேற்றைய தினம் பேய்குளம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தோம். அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி தத்தெடுத்திருக்கும் கிராமமான வெங்கடேசபுரத்தில் அவர் எந்தவித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. 

திமுக டுவிட்டர் பக்கத்தில் தந்தை பெரியாரின் படத்தை எடுத்துவிட்டு பனைமரத்தின் படத்தினை வைத்திருக்கிறார்கள். தேர்தல் என்று வந்ததும் திமுகவின் கொள்கை எல்லாம் பறந்துவிட்டது.இதே செயலை வேறொரு தலைவர் செய்திருந்தால் தற்போது ஏகப்பட்ட கண்டன அறிக்கைகள் வந்திருக்கும். திமுக தலைவர் ஸ்டாலின், நாகரிகம் இல்லாமல் பேசிவருகிறார். காவலாளியை, களவாணி என்பதும், விவசாயியை, விஷவாயு என்றும் ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். அவர் எதுகை மோனையில் பேசுவதாக நினைத்துக்கொண்டு ஏளனமாக பேசி வருகிறார்.வேண்டுமானால், என்னுடன் எதுகை மோனையில் போட்டியிட்டு பேச சொல்லுங்கள் என்றார்.


மக்கள் கருத்து

பாலாApr 15, 2019 - 10:29:57 AM | Posted IP 162.1*****

கனி மொழி வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.. மத தீவிரவாதிகள் ஓரங்கட்ட படுவர்

ராமநாதபூபதிApr 15, 2019 - 10:09:24 AM | Posted IP 141.1*****

ஆட்சியை கையில்கொடுத்த இந்தியாவிற்கே முழியான்கண்ணன் ஒன்னும் செய்யலை இதுல கனிமொழி செய்யலைன்னு இது பீத்துது. போம்மா தூர

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory