» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுரண்டையில் குருத்தோலை பவனி நடைபெற்றது

ஞாயிறு 14, ஏப்ரல் 2019 12:29:07 PM (IST)
நெல்லை மாவட்டம் சுரண்டையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்க்கு முன்னர் இஸ்ரவேல் ஜனங்களால் கோவேறு கழுதையில் ஏற்றி குருத்தோலைகளை கைகளில் ஏந்தி எருசலேம் வீதிகளில் தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என முழக்கமிட்டு பவனி வந்தனர். இதனை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளிக்கு முந்தின ஞாயிறை குருத்தோலை ஞாயிராக அனுசரித்து கிறிஸ்தவர்கள் பவனி செல்வர். அதன் படி சுரண்டையில் சிஎஸ்ஐ கிறிஸ்தவர்கள் குருத்தோலை பிடித்து  நகரின் முக்கிய வீதிகளில் பவனியாக வந்தனர் 

இப்பவனியில், சிஎஸ்ஐ புதுச்சுரண்டை சேகர குரு ரெவ.அகஸ்டின் தலைமையில் ஜெபராஜ், சபை ஊழியர்கள் சுகுமார், ஜாண், சேகர செயலாளர் ஏஎஸ்ஏஆர்.பாலச்சந்திரன், பொருளாளர் ராஜ்குமார், சபை பொருளாளர் ஜேக்கப்,  அன்னப்பிரகாசம், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஸ்டீபன் ஜெபராஜா,  மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பவனி வந்தனர். சுரண்டை ஆர்சி சபையின் பங்கு தந்தை லாரண்ஸ் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது.சிஎஸ்ஐ சுரண்டை சீயோன் சேகர சபைகளின் சார்பில் நடைபெற்ற பவனியில் சேகர குரு ஜெபசிங் தலைமையில் திரளான சபை மக்கள் கலந்து கொண்டனர். 

பங்களாச்சுரண்டை சிஎஸ்ஐ தூய திருத்துவ ஆலயத்தில் நடந்த பவனியில் சேகர குரு ரெவ.வில்சன் தலைமையில் சபை மக்கள் கலந்து கொண்டனர். கீழச்சுரண்டை சிஎஸ்ஐ பரி பவுலின் ஆலயத்தில் நடந்த பவனியில் சேகர தலைவர் ரெவ. ரிச்சர்ட் தலைமையில் சபை மக்கள் கலந்து கொண்டனர். சாம்பவர்வடகரை சிஎஸ்ஐ ஆலயத்தில் சேகர குரு  தலைமையில் நடந்த பவனியில் சபை மக்கள் முக்கிய வீதிகளில் பவனியாக வந்தனர். அதிசயபுரத்தில் சேகர தலைவர் ரெவ்.ஜெபமணி தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது. 

வீகேபுதூர் ஆர்சி ஆலயத்தில் பங்கு தந்தை லாரண்ஸ் தலைமையில் பவனி நடந்தது. சேர்ந்தமரம், ஊத்துமலை, கடையாலுருட்டி, பரன்குன்றாபுரம், சுந்தரபாண்டியபுரம் பகுதிகளிலும் குருத்தோலை பவனி நடந்தது. இதனை தொடர்ந்து நாளை முதல் புனித வாரமாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கின்றனர். இதனை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கின்றன. வரும் வியாழன் அன்று இயேசு காட்டி கொடுப்பதற்க்கு முன்தினம் சீடர்களுடன் ராப்போஜனம் அருந்தியதை நினைவு கூறும் கட்டளை வியாழனும். வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் மும்மணி தியானமும் நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory