» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

எனது எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகத்தான் : தூத்துக்குடி பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு

திங்கள் 15, ஏப்ரல் 2019 8:33:22 AM (IST)"எனது எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காக பணி செய்வதுதான்” என்று தூத்துக்குடி பிரசாரத்தில் கமல்ஹாசன் கூறினார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்குமரன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் நடராஜன் ஆகியோரை ஆதரித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை தேர்தல் பிரசாரம் செய்தார். தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மகாலில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: : நாட்டை பிளவுபடுத்தும் அசுத்தமான சக்தி அகற்றப்பட வேண்டும். தூத்துக்குடியில் தற்போதும் துயரம் நீங்கியதாக  இல்லை. காவல்துறையை இந்த அரசு ஏவல்துறையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி உருவாக உந்தித் தள்ளியதில் தூத்துக்குடியும் ஒன்றாகும்.

தமிழகம் இந்தியாவின் தலை எழுத்தாக மாற வேண்டும். அரசியல் அஜாக்கிரதையால் தூத்துக்குடியில் புற்றுநோய் அதிகரித்துள்ளது. அதைவிட கொடிய நோயான இந்த அரசும், கழகங்களும் அகற்றப்பட வேண்டும். பிரதமரை தேர்ந்தெடுக்க நடைபெறும் இந்த தேர்தலாக இருந்தாலும் உரிமைகளை தட்டிக்கேட்கும் பிரதிநிதி தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டும். எங்களுக்கு ஓய்வு என்பதில் நம்பிக்கை இல்லை. எனது எஞ்சிய வாழ்க்கை மக்களுக்கானது. இது சினிமா வசனமாக இல்லாமல் வாழ்க்கை தரும் செய்தியாக இருக்கும். தயவு செய்து எனது வாழ்வை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு புதிய அரசியல் சூழல் வளர நாம் காரணமாக இருக்கப் போகிறோம். 

அதற்காக விதை தூவும் நாள் ஏப்ரல் 18. மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் வாக்குச்சாவடிகளை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் துணிச்சலோடு கண்காணிக்க வேண்டும். கொள்ளையர்கள் வாக்குச்சாவடிகளையும் கொள்ளையடித்து விடாமல் தமிழகத்தின் பாதுகாவலர்களாக நின்று காக்க வேண்டியது நமது கடமை. நேர்மை, சத்தியம் இவை வெல்லும். நம் நாட்டின் காவல் தெய்வங்கள் ராணுவத்தினரை ஓட்டுக்காக அடையாளம் காட்டுகிறார்கள். அவர்களின் ரத்தத்தை வைத்து பிரதமர் ஓட்டு கேட்கிறார். அரசியல் மாண்பை மீட்டெடுக்க வந்த கட்சி மக்கள் நீதி மய்யம். எனக்கு பல சவால்கள் உள்ளன. நான் 40 இடங்களில் நிற்பதாகத்தான் நினைக்கிறேன். வேட்பாளர்களின் நற்பணிகளை பார்த்த பிறகு அவர்களது உண்மையான முகம் தெரியும்.

நான் பல்லக்கில் செல்லவில்லை. பல்லக்கு தூக்கியாக இருக்கிறேன். வெற்றியை நீங்கள் தர வேண்டும். உங்கள் நாடாளுமன்ற குரல் பொன்குமரன், சட்டமன்றத்தின் குரல் நடராஜன்.  இவர்களுக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்களியுங்கள். 10 மணிக்கு மேல் டார்ச்லைட் கொண்டு செல்லக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறும் அளவுக்கு சின்னம் பிரபலம் அடைந்து உள்ளது. எனக்கு ஓய்வு என்பதில் நம்பிக்கை இல்லை. நான் உழைத்தால் பார்ப்பதற்கு நீங்கள் இருக்கிறீர்கள். எனது எஞ்சிய வாழ்க்கை மக்களாகிய உங்களுக்காகத்தான். என் வாழ்வை ஏற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுடையதாகட்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் ரமேஷ் பாலா, ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினரை மேடைக்கு அழைத்து வந்து சந்தித்து ஆறுதல் கூறினார்.


மக்கள் கருத்து

ஒருவன்Apr 16, 2019 - 08:38:16 AM | Posted IP 162.1*****

கூத்தாடிகள் வயதாகும்போதே பட வாய்ப்புகள் இருக்காது அதனாலே அரசியலில் நடிக்க வாய்ப்பு உண்டு ...கூத்தாடிகள் நம்பி நாசமாக போகாதீர்கள் .

PETCHIMUTHUApr 15, 2019 - 10:06:50 AM | Posted IP 162.1*****

ஆண்மைமுடிந்தபின் அரசியலா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory