» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திமுக வேட்பாளர் கனிமொழி மீது கமல் பரபரப்பு குற்றச்சாட்டு

திங்கள் 15, ஏப்ரல் 2019 10:35:12 AM (IST)

திருநெல்வேலியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யும் போது தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி மீது பரபரப்பு குற்றம் சாட்டினார்.

பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வெண்ணிமலையை ஆதரித்து, கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது: திருநெல்வேலி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வெண்ணிமலை கற்றவர், இந்த ஊரைச் சேர்ந்தவர். உங்கள் வேட்பாளர். அவர் தன் மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும்  என்று விரும்புபவர். அவர் வென்றுவிட்டால் தன் செயலால் சுயமுகத்தைக் காட்டுவார்.

தூத்துக்குடியில் நான் மதிக்கும் மறைந்த கருணாநிதியின் மகள் கனிமொழி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் அங்குள்ள ஒரு கிராமத்திற்கு சென்ற போது ஊருக்குள் விட பொதுமக்கள் மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டி திறந்து வைத்ததும் அவர்கள் தான். ஆனால் தற்போது பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்ன நியாயம் ?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தனது மகளை இழந்த தாய், இப்போது மக்கள் நீதி மய்யத்தை தத்தெடுத்திருக்கிறார். அவர்கள் எப்படி நம்மைத் தாண்டி மேடைக்கு வந்தார்கள் என அவர்களிடம் காவல்துறை விசாரிக்கும்.  அங்கு நிகழ்ந்த சம்பவத்தின்போது போலீஸால் முடியாவிட்டால் சொல்லுங்கள், ராணுவத்தை அனுப்புகிறோம் என்று கூறியது மத்திய அரசு. அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். 

தூத்துக்குடியில் நிகழ்ந்த சோகம், அருகிலிருக்கும் திருநெல்வேலிக்கு வர நீண்ட நாள் ஆகாது. அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.  ஊடகங்கள் நம்மை இருட்டடிப்பு செய்வதாக இங்கே இருப்பவர்கள் சொல்கிறீர்கள். நீண்ட நாள் இருட்டடிப்பு செய்ய முடியாது.  ஊடகங்கள் மட்டுமல்ல, தேர்தல் ஆணையமும் நம்மை இருட்டடிப்பு செய்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து

பாலாApr 15, 2019 - 11:57:30 AM | Posted IP 43.24*****

ஆண்டவரே நீங்க பிக் பாஸ் சீசன் போகலையா...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory