» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

திங்கள் 15, ஏப்ரல் 2019 11:23:12 AM (IST)பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு தூத்துக்குடியில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் உள்ளூர் போலீசார் மட்டுமின்றி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை, மகாராஷ்டிர மாநில சிறப்பு காவல் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் அணிவகுப்பு ஊர்வலம் காராப்பேட்டை பள்ளி முன்பிருந்து தொடங்கியது.

இந்த ஊர்வலம் லயன்ஸ் டவுண் ஜார்ஜ் ரோடு தாமோதர நகர், புதுக்கிராமம், வழியாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இதில், ஏடிஎஸ்பி வேதரத்தினம், காவல் துணை கண்காணிப்பாளர்கள் பிரகாஷ், முத்தமிழ், மாணிக்கம், ரமேஷ், மாரியப்பன், ஆய்வாளர்கள் பார்த்திபன், ஜெயபிரகாஷ், ஜீவன்குமார் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, மகராஷ்ட்ரா சிறப்பு காவல்படை, எல்லைப் பாதுகாப்பு படை, மாவட்ட ஆயுதப்படை போலீசார், உட்பட 500 போலீசார் இந்த அணிவிகுப்பில் பங்கேற்றனர். 


மக்கள் கருத்து

ஜேசுதாசன் VazApr 15, 2019 - 06:17:05 PM | Posted IP 141.1*****

Dear Most respected IPS officer- Murali Rumba, You are doing a very difficult job under tremendously difficult circumstances in a truly professional manner. Thanks once again for everything that you are doing to uphold the rule of law in Tuticorin. Like me there are many other grateful members of the public who appreciate your valuable work. I am writing to give my best support to the Tuticorin Police Force. Your behavior have been absolutely disciplined and controlled. May I pay you the highest level of respect. A professional police force at world standard. Those who see this message, please support to our respected police officers for peaceful election. God be with you and bless you all. Good luck to all public.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory