» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் 101 டிகிரியில் கொளுத்தும் வெயில்

திங்கள் 15, ஏப்ரல் 2019 12:08:01 PM (IST)

திருநெல்வேலியில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தொடர்ந்து வெயில் கொளுத்துவதால் பாெதுமக்கள் புழுக்கத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். 

திருநெல்வேயில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காேடையை மிஞ்சும் வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவான நிலையில், ஞாயிற்றுக்கிழமை 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. முந்தைய நாளைவிட வெயில் அளவு சற்று குறைந்தாலும், அதிக உஷ்ணத்தின் காரணமாக மதிய வேளைகளில் மாநகரின் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.  நகரில் பல இடங்களில் இளநீர் கடைகள், கூல்டிரிங்கஸ் கடைகள் போடப்பட்டுள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory