» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஸ்டெர்லைட் பிரச்சனையை அரசியலாக்காதீர்கள் : சமூக ஆர்வலர் கோரிக்கை!!

திங்கள் 15, ஏப்ரல் 2019 12:57:58 PM (IST)

"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை அரசியலாக்காமல்  அறிவியல் ரீதியாக ஆரய்ந்து முடிவெடுக்க வேண்டும்" என சமூக ஆர்வலர் கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

தூத்துக்குடி தெப்பகுளம் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். சமூக ஆர்வலரான இவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு உடல்நலக்கேடு ஏற்பட்டுள்ளதாக இதுவரை எந்தவித ஆய்வறிக்கையிலும் இடம் பெறவில்லை. ஆதாரங்களும் இல்லை. எனவே தான் இந்த ஆலைகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

எனினும் சமூக ஊடகங்களின் மூலம் ஏற்பட்ட  வதந்தியின் காரணமாக கடந்த ஆண்டு ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் அதை தொடர்ந்து நடைபெற்ற விரும்பதகாத சம்பவத்தால் நமது சொந்தங்கள், நண்பர்கள் 13 பேரை நாம் இழந்து தவிக்கிறோம். ஆனால் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் இன்று சுமார் 50000 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானமின்றி வாடுகிறார்கள்.

ஆலையின் ஒப்பந்த தொழிலாளர்கள், லாரி போக்குவரத்து தொழிலாளர்கள் (நாளொன்றுக்கு 400 லாரிகளில் போக்குவரத்து) துறைமுகத்தில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி தொழிலாளர்கள், மற்றும் சார்பு ஆலையை சார்ந்த பிற தொழிலாளர்கள் என 50ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் அதை சார்ந்த சிறு,குறு தொழில் நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் அவர்கள் மட்டுமின்றி அவர்களை சார்ந்த குடும்பத்தினர் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்வாதாரமின்றி வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் தங்களது வேதனைகளை வெளியே சொல்லக்கூட முடியாத சூழ்நிலை உள்ளது. நாட்டின் பொருளாதாரமும் தொழில் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி பகுதி மக்கள், சிறு வியாபரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் போராட்டத்தின் விளைவுகளையும் அதன் விபரீதங்களையும் கண்டு இன்று வருத்தபடுகிறார்கள். எனவே தமிழகத்தின் மரியாதைக்குரிய அனைத்து கட்சி தலைவர்களையும் தூத்துக்குடி வாக்காளர்கள் சார்பாக பணிவோடு கேட்டுக்கொள்வது என்ன என்றால்..

"குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்”- என்ற குறள் மொழிக்கேற்ப

தயவு செய்து பிரச்சனையின் மறுபக்கத்தையும் கருணையோடு பரிசீலியுங்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை அரசியலாக்காதீர்கள். அதனை ஒரு தொழிலாக நாட்டிற்கு வேலைவாய்ப்பு மற்றும் வளம் தரும் தொழிற்சாலையாக  மட்டுமே பாருங்கள், பெருகிவரும் தொழில்நுட்ப உதவியுடன் எந்த அளவுக்கு மேலும் பாதுகாப்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் ஆலையை செயல்படுத்த முடியும் என்று சிந்திப்போம். அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் வசம் உள்ள ஆலோசனைகளையும் ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்து நல்ல தீர்ப்பு பெறுவோம்.

நமது மக்களின் வாழ்வாதாரத்திற்கும் நாட்டு நலனுக்கும் முன்னுரிமை கொடுத்து மதிப்புமிகு அரசியல் கட்சி தலைவர்கள் இதனை தேர்தல் வாக்குறுதியாக அல்லது கௌரவப்பிரச்னையாக கருதாமல் அறிவியல் அடிப்படையில் நீதிமன்றம் மூலம் தீர்வு காண ஒத்துழைப்பு கொடுக்க பணிவுடன் வேண்டுகிறோம்.


மக்கள் கருத்து

BaskarApr 17, 2019 - 05:00:45 PM | Posted IP 162.1*****

A committee comprising locals and highly technical can be formed to study the real pollution caused by Sterlite. If there is no serious threat to community due to Sterlite operations, we can consider allowing them to operate under the continuous monitoring of local committee. If serious threat exists, produce the evidence in court and make the case strong.

தூத்துகுடிக்காரன்Apr 17, 2019 - 06:06:51 AM | Posted IP 172.6*****

ஒரு லட்சம் பேறு வாழ்வதற்கு 5 லட்சம் பேறு சாக சொல்லுறிய இனி மேலும் வன்முறையை தூண்டாத வேற எங்காவது கவெர்மென்ட் அனுமதி கொடுத்தால் வைத்து கொள் இங்கு வேண்டாம் இனி மேலும் போராட்டம் இங்கு வேண்டாம்

மக்கள்Apr 17, 2019 - 06:01:10 AM | Posted IP 172.6*****

நல்ல திட்டமான வேற எங்காவது வைத்து கொள் ஆனால் இங்கு இனிமேலும் வன்முறையை தூண்டாதே இப்பம் தான் தூத்துக்குடி அமைதியா இருக்கு

மனிதன்Apr 16, 2019 - 10:36:35 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடியில் மொத்தம் 4 இலட்சம் மக்கள் தான் இருக்கின்றனர் அப்போ எப்படி ஒரு லட்சம் பேர் வேலை இல்லாமல் இருக்காங்க. போங்க சார் வேற வேலை இருந்த பாருங்க.

ஒருவன்Apr 16, 2019 - 08:26:30 AM | Posted IP 141.1*****

காசுக்காக வடை நாட்டுக்காரரின் அடிமைகள் .....

மணிApr 16, 2019 - 08:07:11 AM | Posted IP 172.6*****

இத பேச எவ்வளவு பணம் வாங்குன

SaravananApr 15, 2019 - 09:46:12 PM | Posted IP 172.6*****

I am supporting this steps

makkalApr 15, 2019 - 09:14:20 PM | Posted IP 141.1*****

This guy should be made to live near sterlite and drink the polluted water near sterlite.

GanapathyApr 15, 2019 - 07:03:35 PM | Posted IP 162.1*****

Good suggestion.welcome

நிஹாApr 15, 2019 - 06:15:59 PM | Posted IP 141.1*****

சபாஷ். இவ்வளவு நாள் எங்கிருந்தீங்க அண்ணாச்சி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory