» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மின்சாரம் தாக்கி விபத்து வாலிபர் பரிதாப பலி

திங்கள் 15, ஏப்ரல் 2019 1:27:13 PM (IST)

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக பலியானார்.

செங்கோட்டை காலசாமி தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராஜ்(38). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கினார். காற்றுக்காக மின்விசிறியை கட்டிலில் வைத்திருந்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இதனிடையே காலையில் வெங்கட்ராஜ் கட்டில் அருகே இறந்து கிடந்ததை பார்த்து அவரது வீட்டினர் க செங்கோட்டை போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory