» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாணவிக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் சிறையில் அடைப்பு

திங்கள் 15, ஏப்ரல் 2019 1:43:04 PM (IST)

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட வள்ளியூர் ஆசிரியர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் வடக்கு மெயின் ரோட்டில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் டேவிட் (52). இவர் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி புகார் தெரிவிக்க பயந்து, ஆசிரியர் டேவிட் செயலை கண்டும் காணாமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து நெல்லை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் தேவ் ஆனந்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் ரகசிய விசாரணை நடத்தினார். விசாரணையில், ஆசிரியர் டேவிட் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து நெல்லை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் டேவிட்டை கைது செய்தனர்.பின்னர் அவர் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory