» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வலிமையான ஆட்சிக்கு மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் : சரத்குமார் பிரசாரம்

திங்கள் 15, ஏப்ரல் 2019 2:15:15 PM (IST)

மத்தியில் வலிமையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்வள்ளியூரில் சரத்குமார் பிரசாரம் செய்தார்

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக மனோஜ் பாண்டியன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வள்ளியூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சமக தலைவர் சரத்குமார் பிரசாரம் செய்தார். தேர்தல் எப்போது வந்தாலும் அது முக்கியமானதாக கருதப்படுகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பதிலடி கொடுக்கின்ற ஒரு தலைவர் வேண்டும். அதற்கு மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். மத்தியில் வலிமையான, பெரும்பான்மையான ஆட்சி அமைய, பிரதமராக மோடி மீண்டும் வர வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சிகள் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் இணைந்திருக்கிறார்கள். 

இதற்கு காரணம் மத்தியில் வலுவான, பெரும்பான்மையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தான். தமிழகத்திற்கு பொருளாதார அடிப்படையிலும், வாழ்வாதார உயர்வுக்காகவும் அதிக திட்டங்களை தீட்டுகின்ற திட்டங்களுக்கு நிதியுதவி வேண்டும் என்றால், அந்த நிதியுதவியை மத்தியில் இருந்து பெறுவதற்கு நமக்கு சிறந்ததொரு ஆட்சி வேண்டும். அதற்காக மத்தியில் நிலையான பெரும்பான்மையான ஆட்சி இருந்தால்தான் சாதிக்கமுடியும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட கூட்டணியான மக்கள் நலன் காக் கின்ற கூட்டணிதான் இந்த மெகா கூட்டணி ஆகும்.இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory