» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கனிமொழியின் இறுதிகட்ட பிரசாரத்தில் வைகோ பங்கேற்கிறார்: கீதாஜீவன் எம்எல்ஏ தகவல்

திங்கள் 15, ஏப்ரல் 2019 4:00:57 PM (IST)

 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்  கனிமொழி கருணாநிதியின் இறுதி கட்ட பிரசாரம் கோவில்பட்டியில் நிறைவு பெறுகிறது. இதில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்கிறார்.

இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பி.கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி கருணாநிதி அவர்கள் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப் பேரவை தொகுதிகளிலும் கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்று வருகிறார்கள்.

பிரச்சாரத்தின் இறுதிநாளான 16-ந் தேதி தனது பிரச்சாரத்தை கோவில்பட்டியில் நிறைவு செய்கிறார். அன்றைய தினம் காலை 11.15 மணிக்கு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட்டக்கோவிலில் தனது பிரசார பயணத்தை துவக்கிடும் அவர் தொடர்ந்து அம்பேத்கர் நகர், ஸ்டேட்பேங் காலணி, குறிஞ்சி நகர், போல்பேட்டை மேற்கு, ஏ.ஏ.னு.ரோடு, பாளை ரோடு, பழைய பேரூந்து நிலையம், குருஸ் பர்னாந்து சிலை, பள்ளி வாசல், தந்தி ஆபீஸ் ரோடு, அந்தோணியார் கோவில், ஹோட்டல் சுகம், அண்ணாசிலை, ஜெயராஜ் ரோடு வழியாக புதிய பேரூந்து நிலையத்தில் முடிக்கிறார்.

அதன்பின் மாலை 3.00 மணிக்கு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இறுதியாக மாலை 4.00 மணிக்கு கோவில்பட்டி நகரம் காமராஜர் சிலை முன்பு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். இந்த பிரசார பொதுக்கூட்த்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். எனவே தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தி.மு.கழக நிர்வாகிகள் தொண்டர்கள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

சாமிApr 16, 2019 - 05:21:30 PM | Posted IP 172.6*****

ஆட்டம் காலி

கண்ணன்Apr 16, 2019 - 07:09:14 AM | Posted IP 162.1*****

குருநாதா எங்களுக்கு இனி கவலை இல்லை

கணேசன்Apr 15, 2019 - 11:37:01 PM | Posted IP 141.1*****

வைகோ கூட இருந்த போதுதான் வாஜ்பாய் மற்றும் மோடி பிரதமர் ஆனார்கள்

கீதாApr 15, 2019 - 04:51:46 PM | Posted IP 162.1*****

அப்போ பாட்டி கனிமொழி தோல்வி உறுதி விதி வலியது ..இந்து கடவுள்களின் சாபம் வைகோ வடிவில் 7 1 /2 ஆக வந்து விட்டது

குமார்Apr 15, 2019 - 04:16:46 PM | Posted IP 141.1*****

எங்கள் தலைவர் வந்து விட்டார்.... இப்பதான் நிம்மதியா இருக்கு....கனிமொழி அவர்களின் தோல்வி உறுதியாகிறது..... நன்றி தலைவரே....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory