» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுற்றுச்சூழலை பாதிக்கும் தொழிற்சாலைக்கு அனுமதி கிடையாது : தமிழிசை பிரசாரம்!!

திங்கள் 15, ஏப்ரல் 2019 4:15:16 PM (IST)தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை பாதிப்படையும் எந்த தொழிற்சாலையும் நாங்கள் ஊக்கப்படுத்த மாட்டோம் என பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்  கூறினார். 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கோவில்பட்டி பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது, மக்கள் எழுச்சியுடன், அன்பாக, பாசத்தோடு எங்களை வரவேற்கிறார்கள். ஆகையால் அதிமுக பாஜக கூட்டணி இந்த தொகுதி மட்டுமல்ல 40 தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. நாங்கள் நேர்மறையான பிரச்சாரத்தை எடுத்துச் செல்கிறோம்.

கனிமொழி போன்றோர் எதிர்மறையான பிரச்சாரத்தை எடுத்துச் செல்கிறார்கள். தூத்துக்குடி என்றாலே போராட்ட களமாக சித்தரித்து மறுபடியும் மறுபடியும் அவர்கள் அதையே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தெளிவாக சொல்லி இருக்கிறோம். சுற்றுச்சூழலை பாதிப்படையும் எந்த தொழிற்சாலையும் நாங்கள் ஊக்கப்படுத்த மாட்டோம். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆரம்ப கட்டிடத்திற்கான கல்லை எடுத்து வைத்தது திமுக, அதை விரிவடையச் செய்தது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு உற்பத்தி செய்ய அனுமதித்து திமுக தான். அதனாலதான் சுற்றுச்சூழல் பாதிப்பு வந்தது. 

அதிமுக அரசு அதை மூட வேண்டும் என்று தெளிவான முடிவு எடுத்து அதை மூடி உள்ளனர். ஏதோ அந்தப் பிரச்சினை அவர்களுக்கு சாதகமாகவும், எங்களுக்குப் பாதகமாக இருப்பதைப் போன்று. வெளி தோற்றத்தை ஏற்படுத்தி தூத்துக்குடியில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவு இருக்கும் பொழுது, மறுபடியும் மறுபடியும் ஒரு போராட்டமாகவே தூத்துக்குடியை சித்தரிக்க நினைக்கிறார்கள். இது தவறானது. உள்நோக்கம் கொண்டது. அதனால் இன்று மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

அதனால் எந்த எதிர்மறை பிரசாரமும் இங்கு எடுபடாதுநான் இந்த மண்ணின் மகள். எனக்கு இந்த மண்ணிற்கு சொந்தம் இருக்கிறது இங்கு வருவதற்கு துணிச்சலை  யார் கொடுத்தது என்று கேட்பதற்கு ஸ்டாலின்  யாரு, கனிமொழிக்கு எப்படி வந்தது என்று நான் கேட்கலாம். இன்று பனை படத்தினை டுவிட்டர் பக்கத்தில் போட்டு இருக்கிறார். பெரியாரை கழட்டி விட்டுவிட்டு இன்று ஓட்டு வேண்டும் என்பதற்காக பெரியார் வேண்டாம் யாரும் வேண்டாம். பனை மரத்திற்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. 

மண்ணின் மகளுக்கும், மற்றவர்களுக்கும் நடக்கும் போராட்டம், ரொம்ப ஏளனமாக தமிழிசை இங்கு தோற்பதற்காக வந்திருக்கிறாரா என்று மு.க.ஸ்டாலின் பேசுகிறார். திமுகவில் வாரிசு அரசியல் தான் இருக்கிறது. எல்லாரையும் விட துணிச்சல் மிகுந்தவள் நான். நான் என்னுடைய அப்பாவின் நிழலில் தலைவராக வில்லை, நான் நானே உழைத்து தலைவராக இருக்கிறேன். எனக்கு எல்லாரையும் விடவும் தமிழகத்தில் துணிச்சல் அதிகமாக உள்ளது. ஆகையால் என்னை சும்மா ஏளனப்படுத்தி பார்க்க வேண்டாம். ஒரு விளம்பரம் கொடுத்ததற்காக சாதிக்பாட்சா மனைவி வீட்டின் மீது கல் வீசி உள்ளனர் என்று அவர் ஜனாதிபதி மனு அளித்துள்ளார் அவங்க ஒரு பெண் அப்படி என்றால் பெண் சுதந்திரம் இல்லையா. சுதந்திரத்தினை  பற்றி பேசுவதற்கு கனிமொழிக்கும் ஸ்டாலினுக்கும் என்ன உரிமை இருக்கிறது என்றார். பேட்டியின் போது தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ உடனிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory