» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காங்கிரஸ் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

திங்கள் 15, ஏப்ரல் 2019 5:33:32 PM (IST)
சுரண்டையில் காங்கிரஸ் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா  நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் சுரண்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கட்சி அலுவலகத்தில் நடந்தது. விழாவில் நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் தலைமை வகித்து அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இந்திய அரசியல் அமைப்பில் சட்ட மேதை அம்பேத்கரின் செயல் குறித்து புகழஞ்சலி செலுத்தினார். 

விழாவில் மாநில பேச்சாளர் பால்த்துரை, நகர தலைவர் ஜெயபால், மாவட்ட துணைத் தலைவர் பால்(எ) சண்முகவேல், மாவட்ட அமைப்பு சாரா காங்கிரஸ் தலைவர் பிரபாகர், ஊடக பிரிவு சிங்கராஜ், நகர செயலாளர் பன்னீர் செல்வம், ராம்ராஜ், சக்திவேல், தெய்வேந்திரன், வக்கீல் ரமேஷ், சமுத்திரபாண்டி, சாலமோன், ஜெயசந்திரன், கந்தையா, அழகுராஜ், டென்சிங், கணேசன், முருகன், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory