» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வேன் மோதி ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பரிதாப பலி

திங்கள் 15, ஏப்ரல் 2019 6:16:37 PM (IST)

செங்கோட்டை அருகே சாலையை கடந்த ஐயப்ப பக்தர்கள் மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த மேட்டு துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் சிவபண்டாரம். இவரது மனைவி நல்லமுத்து(65). இவரது உறவினர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வடக்கு காரசேரியை சேர்ந்த பேச்சிமுத்து(23). இவர்கள் தங்கள் உறவினர்களுடன் நேற்று தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஒரு வேனில் சபரிமலை ஐயப்ப கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்களாம்.

இன்று அதிகாலை அவர்கள் ஊர் திரும்பினர். வேன் செங்கோட்டை அருகே கேசவபுரம் பகுதியில் வந்தபோது வேனில் இருந்தவர்கள் இயற்கை உபாதையை கழிப்பதற்காக கீழே இறங்கினர். வேனை டிரைவர் ரோட்டு ஓரமாக நிறுத்தினார். வேனில் இருந்து இறங்கிய பக்தர்கள் சாலையை கடந்து செல்ல முயன்றனர்.

அப்போது அந்தவழியே காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு ஒரு வேன் கேரளா நோக்கி சென்றது. எதிர்பாராதவிதமாக வேன் ரோட்டை கடந்த பக்தர்கள் மீது மோதியது. இதில் நல்லமுத்து, பேச்சிமுத்து உள்ளிட்டோர் பலத்த காயமடைந்தனர். இதுபற்றி  போலீசுக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

வழியிலேயே நல்லமுத்து பரிதாபமாக இறந்தார். பேச்சிமுத்து மேல் சிகிச்சைக்காக பாளை.,ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு பேச்சிமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.எனினும் சிகிச்சை பலனின்றி பேச்சிமுத்து பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory