» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு : போலீசார் விசாரணை

திங்கள் 15, ஏப்ரல் 2019 6:45:37 PM (IST)

புளியங்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகே வசித்து வருபவர் ராமசாமி (64). சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உள்ளே சென்று பார்க்கையில் சுமார் இரண்டேகால் பவுன் செயின், 8 கிராம் தங்கநாணயம், ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் சேர்ந்தமரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory