» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாட்டை பாதுகாக்கும் வலிமைமிக்கவர் மோடி : உடன்குடியில் சரத்குமார் பேச்சு

திங்கள் 15, ஏப்ரல் 2019 8:48:59 PM (IST)
நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் வலிமை மிகுந்தவராக பிரதமர் நரேந்திரமோடி திகழ்கிறார் ஏன்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து உடன்குடி பிரதான பஜாரில் சமக தலைவர் சரத்குமார் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, நடைபெறவுள்ள தேர்தலில் நாட்டை பாதுகாக்கும் வலிமை,திறமை,இளமை உள்ள ஒரே தலைவராக பிரதமர் நரேந்திரமோடி மட்டுமே திகழ்கிறார். நாட்டின் எல்லைகளை காப்பதிலும்,நாட்டு வளங்களைச் சுரண்டுபவர்களை தண்டிப்பதிலும் காவலாளியாக அவர் திகழ்கிறார். நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்கள் பாஜக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றுவதற்காக போலியான,நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்குகிறது. இதன்மூலம் நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறது. மக்கள் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல் நல்ல பண்பான, திறமையான வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார். பிரச்சாரத்தின் போது மாவட்ட செயலர்கள் தயாளன்(சமக) சிவமுருகன்ஆதித்தன்(பாஜக) அதிமுக ஒன்றியம்    மகராஜன், நகர செயலர் ஜெயக்கண்ணன், தேமுதிக ஒன்றிய செயலர் தங்கவேல் துரை, நகர செயலர் சித்திரைராஜ் மற்றும் திரளான கூட்டணிக்கட்சியினர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து

சாமிApr 16, 2019 - 05:19:56 PM | Posted IP 172.6*****

நியாயமாய் பேசுகிறார்

ராஜ்Apr 16, 2019 - 10:15:28 AM | Posted IP 141.1*****

லூசே

ஒருவன்Apr 16, 2019 - 08:22:05 AM | Posted IP 162.1*****

கூத்தாடிகள் பின்னாடி போய் நம்புறவங்களும் முட்டாள் ...

இவன்Apr 16, 2019 - 08:21:27 AM | Posted IP 162.1*****

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பாட்டில் ல தண்ணீர் குடித்து வெறும் நடிப்பு தான் , பாட்டில் ல மூத்திரம் கொடுத்து குடிக்க சொன்னாலும் புத்தி வராது ... நடிகரை நடிகராக மட்டும் பாருங்க ...

பாலாApr 15, 2019 - 11:25:16 PM | Posted IP 162.1*****

தலீவா நீ இன்னும் ஊரை ஏமாத்திட்டு இருக்கியா

ராஜாApr 15, 2019 - 09:23:36 PM | Posted IP 162.1*****

இந்த பொழப்புக்கு எங்காயாவது!!!!!!!!!!!!!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory