» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றால அருவிகளில் மிதமாக விழும் தண்ணீர்

புதன் 24, ஏப்ரல் 2019 10:49:26 AM (IST)



தென்காசி, செங்கோட்டையில் பெய்துள்ள பலத்த மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று தண்ணீர் மிதமாக கொட்டியது. 

நெல்லை மற்றும் தென்காசி பகுதியில்  கடந்த வாரம் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெப்பம் குறைந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு தென்காசியிலும், குற்றால மலைப்பகுதிகளில் மழை பெய்ததால் வெறும் பாறைகள் மட்டுமே தெரிந்த குற்றாலத்தில் தண்ணீர் நன்றாக கொட்டியது. 

முக்கிய அருவிகளான மெயின்அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் இன்று நன்றாக தண்ணீர் விழுந்ததால், சுற்றுலா பணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இன்று குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் மிதமான அளவு தண்ணீர் விழுந்தது. சுற்றுலாபயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory