» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆலங்குளம் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை

புதன் 24, ஏப்ரல் 2019 11:18:11 AM (IST)

ஆலங்குளம்-கயத்தாறு பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழையால் மரங்கள்- மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. சம்பவத்தன்று தென்காசி, செங்கோட்டை பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இந்த நிலையில் நேற்று பகல் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தியது. ஆனால் பிற்பகல் கருமேகங்கள் திரண்டு பல்வேறு இடங்களில் மழை பெய்தது.ஆலங்குளத்தில் நேற்று மாலை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

பலத்த மழையுடன் சூறைக்காற்றும் வீசியது. இதில் ஆலங்குளம் ஜோதிநகர் பகுதியில் ஆங்காங்கே மரங்களும், 7 மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதனால் ஆலங்குளம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.கோடை மழையின் போது இடி-மின்னலுடன் சூறாவளி காற்றும் வீசுவதால் பல்வேறு இடங்களில் பயிரிடப் பட்டுள்ள வாழை மரங்களும் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் புகார் செய்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory