» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கலை-அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்

புதன் 24, ஏப்ரல் 2019 11:33:39 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டிலும் கலை-அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்-மாணவிகள் அதிக ஆர்வத்தோடு விண்ணப்பித்து வருகின்றனர்.

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. இதையடுத்து, மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, உயர்கல்வி நிறுவனங்களில் விண்ணப்பங்களை நேரிலும், இணையவழியிலும் மாணவர்-மாணவிகள் அளித்து வருகின்றனர். பொறியியல் படிப்புகளை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்தது, மருத்துவத்திற்கு நீட் தகுதித் தேர்வு உள்ளிட்ட காரணங்களால் கலை-அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்-மாணவிகளிடம் அதிகரித்துள்ளது.

கலை, அறிவியல் படிப்புகளை பொருத்தவரை இளநிலை ஆங்கில இலக்கியம் (பிஏ ஆங்கிலம்),  பிஎஸ்சி கணிதம், பி.காம், பிபிஏ, பிசிஏ, புவியியல், உணவு அறிவியல், ஹோட்டல் மேலாண்மை, ஆடை வடிவமைப்பு, சுற்றுலா மேலாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 77 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளும், 6 மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளும், 4 உறுப்புக் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் சேர்வதற்காக மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பங்களை அளித்துச் செல்கிறார்கள். தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள கலை-அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory