» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

புதன் 24, ஏப்ரல் 2019 12:16:51 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் சேசமாணிக்கம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிராஜா விவசாயி. இவரது மனைவி ருக்மணி (28). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே ருக்மணி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

அவரை உடனே மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 4 வருடங்களே ஆனதால் திருநெல்வேலி உதவி ஆட்சியர் மணிஷ்நாரணவரே விசாரணை நடத்தி வருகின்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory