» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வேலைக்கு வந்த வடமாநில இளைஞர் திடீர் உயிரிழப்பு

புதன் 24, ஏப்ரல் 2019 12:38:36 PM (IST)

வசவப்பபுரம் அருகே மருத்துவமனைக்கு சென்று விட்டு வந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.

ஆந்திரமாநிலத்தை சேர்ந்த ஜனராஜ் என்பவரது மகன் நரேஷ் (31). இவர் ரயில்வே கான்ட்டிராக்டரிடம் வேலை செய்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியில் தண்டவாள பணிகள் நடைபெற்றதால் அங்கு நரேஷ் பணிக்கு  வந்துள்ளார். அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகவே திருநெல்வேலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு ஆட்டாேவில் திரும்பி வந்துள்ளார். 

வசவப்பபுரம் அருகே வரும் போது திடீரென ஆட்டோவில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை பாளை., ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவர் ஏற்கனவே நெஞ்சுவலியால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து முறப்பநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory