» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்லிடை அருகே குளத்தில் மூழ்கி மாணவன் பலி

புதன் 24, ஏப்ரல் 2019 2:05:50 PM (IST)

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே குளத்தில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தான். 

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் வேதக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாசானம். இவருடைய மகன் முத்துபாலன் ( 12). இவன் அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று முத்துபாலன், அவனது தம்பி, மற்றொரு சிறுவன் ஆகியோர் அருகே உள்ள குறிப்பன்குளத்தில் குளிக்கச் சென்றனர். 3 பேரும் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, முத்துபாலன் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. 

சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி அவன் பரிதாபமாக இறந்தான். இதை பார்த்த மற்ற 2 பேரும் அதிர்ச்சி அடைந்து ஊருக்குள் சென்று தங்களின் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் குளத்தில் இறங்கி நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு முத்துபாலனை சடலமாக மீட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory