» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இடைகால் பள்ளியில் 19ம் தேதி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

செவ்வாய் 14, மே 2019 6:47:48 PM (IST)

இடைகால் மீனாட்சி சுந்தரம் ஞாபகார்த்த மேல்நிலைப் பள்ளியில் 19ம் தேதி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.

தென்காசி அருகேயுள்ள இடைகால் மீனாட்சி சுந்தரம் ஞாபகார்த்த மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1964ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை படித்த மாணவர்களின் சந்திப்பு விழா வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. விழாவில் முன்னாள் ஆசிரியர்களைப் பாராட்டி கவுரவிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களின் மலரும் நினைவுகள், விழாமலர் வெளியீடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவிற்கு ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி அருணாச்சலம் தலைமை தாங்குகிறார்.  ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி லெட்சுமிகாந்தன் பாரதி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். ஓய்வு பெற்ற தர்மபுரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆறுமுகம் பள்ளி தாளாளர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். 

அன்னைகலை அகாடமி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.எழுத்தாளர் மம்மது, பொதிகை சில்க்ஸ் மகுது மீரான் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். வணிகவரித்துறை உதவிஆணையர் டாக்டர் சங்கரநாராயணன் வரவேற்று பேசுகிறார். பள்ளித் தலைவர் சுரேஷ் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பண்டாரமுதலியார், பள்ளி தலைமையாசிரியர் ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். கவிஞர் கலாப்பிரியா, குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி முதல்வர் திரிபுரசுந்தரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களை முன்னாள் மாணவர்கள் பாராட்டி பேசுகின்றனர். டாக்டர்களுடன் கேள்வி பதில் நிகழ்ச்சி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் பின்னர் விழா மலரை மதுரை பாலச்சந்தர் வெளியிட முதல் பிரதியை சென்னை கன்னிமாரா பொது நூலக ஓய்வு பெற்ற முதன்மை நூலகர் மீனாட்சி சுந்தரம் பெற்றுக் கொள்கிறார். கடையநல்லூர் குமாரமுருகன் நூல் விமர்சனம் செய்கிறார்.

முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெறுகிறது.  மேலும் முன்னாள் மாணவர்களின் மலரும் நினைவுகள் நினைவு கூறப்படுகிறது. நாட்டுப்புறப்பாடல்கள், மதுக்கூர் ராமலிங்கத்தின் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகளை ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ., மூக்கையா, வழக்கறிஞர் அய்யனார் பாண்டியன், முனைவர் செல்வநாயகி ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். வழக்கறிஞர்கள் தேவிஸ்ரீ, செந்தூர்பாண்டியன் ஆகியோர் நன்றி கூறுகின்றனர். விழா ஏற்பாடுகளை பள்ளி முன்னாள் மாணவர்கள் குருசாமி, சண்முகசுந்தரம், முத்தையா (எ)முத்து, வைரவன், கோட்டையன், பட்டாபிராமன், மாணிக்கவாசனம், முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

M.JABARULLAKHAN.மே 15, 2019 - 06:20:39 PM | Posted IP 157.4*****

அருமையான வாய்ப்புகளை ஏற்டுத்தி நண்பர்களை இணைத்து கொண்டாடுவது பாராட்டுக்குறியது .பட்டாபி வைரவன் மிக்க நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory