» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாஜகவுடன் மு.க.ஸ்டாலின் பேசியது உண்மை தான் : தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி

செவ்வாய் 14, மே 2019 8:23:42 PM (IST)

பாஜகவுடன் பேசவில்லை என்று ஸ்டாலின் மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், அதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலளித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜகவுடன் திமுக பேசிவருவது உண்மைதான் என்று பேட்டியளித்திருந்தார். இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன் என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நிரூபிக்கத் தவறினால் நரேந்திர மோடியும், மாநில பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் திமுக பேசியது என நான் கூறியது உண்மைதான். பாஜகவுடன் திமுக பேசியதாக எனக்கு வந்த தகவலின் அடிப்படையில் கூறினேன். நான் சொல்வதில் உண்மை இல்லாமல் இருக்காது. ஸ்டாலின் அரசியலில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால், என்னை அரசியலை விட்டு விலகச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. நான் கூறியது உண்மையா இல்லையா என்பதை ஸ்டாலின் நிரூபிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ராஜ்மே 15, 2019 - 08:58:11 AM | Posted IP 162.1*****

சூப்பர்

ஜான்மே 15, 2019 - 08:15:42 AM | Posted IP 172.6*****

தோற்க போற கட்சி பிஜேபி அது கூட போய் யாரும் பேச்சுவார்த்தை நடத்துவங்களா. Fraud

உண்மைமே 14, 2019 - 08:30:47 PM | Posted IP 162.1*****

அக்கா..நீங்க கொஞ்சம் நிரூபிச்சி காட்டிருங்களேன்...நிரூபிக்கலன்னா...இதுதாந் நல்ல சந்தர்ப்பம். பேசாம கட்சிய விட்டு விலகிடலாம்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory