» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தி.மு.க. வெத்து வாக்குறுதிகளை கொடுக்கிறது: பிரேமலதா பிரசாரம்

புதன் 15, மே 2019 8:28:31 AM (IST)

தி.மு.க. கொடுக்கும் வாக்குறுதி வெத்து வாக்குறுதி என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முத்தையாபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.

ஓட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பாரதிநகரில், ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் திறந்த வேனில் நின்று கொண்டு மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது; ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் நிறைவேற்றப்படும்.  தேர்தல் முடிந்த பின்னர் ஆளும் கட்சி சார்பில் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். பொங்கல் பரிசாக ரூ.1000 பெறாதவர்களுக்கும் அந்த பணம் வழங்கப்படும். குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும். வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும். 

தி.மு.க. ஆட்சி காலத்தில் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்பட்டத்தை மக்கள் மறக்க கூடாது. இந்த ஆட்சியில் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை இல்லை. வருகிற 23-ந்தேதியன்று நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி அமோக வெற்றி பெறும் என்பது உறுதி. அதே போல் நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் நடக்க உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். வெற்றி பெற்ற பின்னர் பிரதமரை சந்தித்து நதிகளை இணைப்போம். நதிகளை இணைப்பதன் மூலம் விவசாயத்துக்கும், குடிநீர் பிரச்சினைக்கும் நிச்சயமாக நிரந்தர தீர்வு காணப்படும். இந்த அரசு பெண்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வரும். ஆளும் கட்சிக்கு வாய்ப்பு தாருங்கள். அப்போது தான் மக்கள் பிரச்சினை தீர்க்கப்படும்.  

தி.மு.க. கொடுக்கும் வாக்குறுதி வெத்து வாக்குறுதி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.  ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களுக்கு நல்லது செய்வதற்காக அ.தி.மு.க. சார்பில் மோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதனை தொடர்ந்து அவர் ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் வேட்பாளர் மோகன், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, டாக்டர் விஜயபாஸ்கர், காமராஜ், முன்னாள் அமைச்சர் வளர்மதி, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகநயினார், அழகிரிசாமி, அ.தி.மு.க. முத்தையாபுரம் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிமே 16, 2019 - 10:09:38 AM | Posted IP 162.1*****

நீ இப்போ என்ன சொல்லி ஒட்டு கேக்குற? அஞ்சு வருஷம் ஆண்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைப்பாங்களாம். ஏன் இந்த அஞ்சு வருஷம் என்ன புடிங்கிட்டு இருந்தீங்க அப்படின்னு யாரவது கேட்டா மூஞ்சை எங்க கொண்டு வைப்ப

ராக்மே 15, 2019 - 08:55:53 AM | Posted IP 172.6*****

லூஸ்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory