» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அதிகாரிகள் ஆய்வு காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

புதன் 15, மே 2019 1:31:07 PM (IST)

ஆலங்குளம் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார கடைகளில் திடீர் ஆய்வு நடத்திய சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு துறையினரும், பேரூராட்சி அதிகாரிகளும் காலாவதியான உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர். 

சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குனர் நளினி உத்தரவின் பேரில் நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆலங்குளம் பழைய, புதிய பேருந்து நிலையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். 


இதில் தயாரிப்பு தேதி குறிப்பிடாத, காலாவதியான திண்பண்டங்கள், உணவுப்பொருட்கள், திறந்த வெளியில் ஈக்கள் மொய்க்க கூடிய திண்பண்டங்கள், கெட்டுப்போன மாம்பழங்கள் போன்றவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். பின்னர் இவற்றை பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கிற்கு கொண்டுசென்று கொட்டி  அழித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory