» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் : தென்காசி ஆணையாளர் வேண்டுகோள்

புதன் 15, மே 2019 1:50:39 PM (IST)

தென்காசி நகராட்சி பகுதியில் குடிநீர் நீர்தேக்கம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்று தென்காசி நகராட்சி ஆணையாளர் பிரேம்ஆனந்த் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தென்காசி நகராட்சி பகுதி மக்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் குற்றாலம் குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குற்றாலம் குடிநீர் திட்டம் செயல்படுத்துப்படும் குடிநீர் நீர்தேக்கத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக பராமரிப்பு பணிகள் கடந்த 13ம் தேதி துவங்கியது. இப்பணிகள் வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. 

எனவே தென்காசி நகராட்சி பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த குற்றாலம் குடிநீர் வரும் 19ம் தேதி  வரை மட்டும் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை ஈடுகட்டும் வகையில் தென்காசி நகராட்சி பகுதி மக்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இந்த சிரமத்தை பொறுத்து கொள்வதோடு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு தென்காசி நகராட்சி ஆணையாளர் பிரேம்ஆனந்த் அறிக்கையில் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory