» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பேருந்து நிலையத்தில் விஷம் குடித்த இளம்பெண்

புதன் 15, மே 2019 2:02:57 PM (IST)

செங்கோட்டை பேருந்து நிலையத்தில் ஒரு இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பயணிகள் தங்கும் கட்டிடத்தில் இளம்பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தனது கைப்பையில் வைத்திருந்த ஒரு சிறிய பாட்டிலை எடுத்து அதில் இருந்த திரவத்தை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் திடீரென அந்த பெண் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த ஆம்புலன்ஸ் செங்கோட்டை பேருந்து நிலையத்திற்கு வந்தது. மயங்கி விழுந்திருந்த இளம்பெண்ணை மீட்கப்பட்டு செங்கோட்டை அரசு  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அந்த பெண் விஷம் குடித்தது தெரியவந்தது. உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் வடகரை பகுதியை சேர்ந்த காளியம்மாள் (வயது 28) என்புது தெரியவந்துள்ளது. 

மேலும் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக காளியம்மாள் விஷம் குடித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் முதல் காளியம்மாள் வீட்டுக்கு செல்லாமல் பேருந்து நிலையத்தில் இருந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory