» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மணல்லாரி மோதி வியாபாரி பரிதாப உயிரிழப்பு

புதன் 15, மே 2019 6:06:40 PM (IST)

நாங்குநேரியில் மணல்லாரி மோதி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கீழ காரங்காடு பகுதியை சேர்ந்தவர் ருக்மணி. ஆடு வியாபாரி. இவர் சம்பவத்தன்று மாலை நாங்குநேரி இருந்து கீழ காரங்காட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது பெருமாள் நகர் விலக்கில் சென்ற போது அவ்வழியே மணல் ஏற்றி வந்த லாரி இவரது பைக் மீது மோதியது. 

இதில் ருக்மணி படுகாயம் அடைந்தார். உடனே பாளை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்கு பதிந்து லாரி டிரைவர் மாரியப்பன் என்பவரை மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory